என்னை சில பேர் திட்டுறாங்க!! சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்..
இமான் பிரச்சனை
கடந்த சில மாதங்களாகவே பெரும் சர்ச்சையாக இருக்கும் விஷயம் சிவகார்த்திகேயன், டி. இமான் விவகாரம் தான். இசையமைப்பாளர் டி. இமான் தனது மனைவியை விட்டு பிரிய முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் என ஒரு கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என டி. இமான் அளித்த பேட்டியும் வைரலானது. இது பற்றி சிவகார்த்திகேயன் வாய்த்திறக்காமல் இருந்து வந்தார்.
அயலான் இசை
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்திற்கு பின் அயலான் படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. 2016ல் ஆரம்பிக்கப்பட்ட அயலான் படத்தினை இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டுடியோ ராஜேஷ் தயாரிப்பில் இப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் அயலான் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், தன்னை வெறுப்பவர்களை குறித்து சைலெண்ட்-ஆக பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஹேட்டர்ஸ்களுக்கு பதில்
பட்டாசு போல் பேசி வந்த சிவகார்த்திகேயன், என்னை சூப்பர், இன்ஸ்பிரேஷன் சொல்லுவாங்க. சில பேரு திட்டுறாங்க, ஆனால், நான் இதையெல்லாம் எடுத்துக்குறதே இல்லை என்று என் ஹேட்டர்ஸ்-ஐ நான் ஒன்றுமே சொல்ல விரும்பல.
என்னை பிடித்தவர்களுக்காக எப்போதும் போல், என் வழியில் நான் ஓடி கொண்டு இருக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் பாசிட்டிவ்-ஆக பேசியிருக்கிறார்.
ஆனால் இமான் பிரச்சனை குறித்து பேட்டியிலும் சரி நிகழ்ச்சியில் பேசும் போது கூட ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.