இந்த தமிழ் புத்தாண்டிற்கு தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் திரைப்படம்...
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
முதலில் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டி வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக நடனம், தொகுப்பாளர், விருது விழா தொகுப்பாளர் என தன்னை மெருகேற்றிய வண்ணம் இருந்தார்.
அப்படியே படங்கள் பக்கம் வந்தவர் இப்போது முன்னணி நாயகன் ரேஞ்சிற்கு முன்னேறியுள்ளார். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் போன்ற துறைகளிலும் கலக்கியுள்ளார். கடைசியாக சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தாய் கிழவி என்ற படத்தை தயாரித்தார்.

அப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக கலைஞர் தொலைக்காட்சியில் மாலை ஒளிபரப்பாக உள்ளதாம்.