சிவகாத்திகேயனை விடாமல் கலாய்த்து தள்ளும் ஆண்ட்டி இந்தியன் இயக்குனர்! வெச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்..

Rajinikanth Sivakarthikeyan Shankar Shanmugam
By Edward Jun 16, 2022 04:10 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் நடிப்பில் 2007ல் வெளியான படம் சிவாஜி. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஏவிஎம் பிரடொக்ஷன் நிறுவனம் 60 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் ஏவிஎம் நிறுவனம் படத்தின் புகைப்படங்களை பதிவிட்டு நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் ரஜினி காந்த் ரசிகர்கள் சிவாஜி புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பதால் இதுகுறித்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். சிவாஜி படத்தினை நான் 15 முறைக்கும் மேல் தியேட்டரில் பார்த்திருக்கிறேன்.

இதுஒரு அற்புதமான அனுபவம். சிறந்த நடை, ஸ்டைலில் ரஜினி சார் நடித்த சிறந்த படங்களில் சிவாஜியும் ஒன்று. இப்படிபட்ட படத்தினை கொடுத்த சங்கர் சாருக்கும் ஏவிஎம்க்கும் நன்றி என தெரிவித்திருந்தார்.

இதனை இயக்குனரும் யூடியூப் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் என்னெல்லாம் சொல்றாங்க பாருங்க என்ற பாணியில் கலாய்த்துள்ளார். இதற்கு ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.