28 வயது இளம் முன்னணி நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. யார் தெரியுமா

Sivakarthikeyan Rashmika Mandanna
By Kathick Jun 27, 2024 06:00 PM GMT
Kathick

Kathick

Report

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்கே 23 ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்தும், அப்படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என்றும் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

28 வயது இளம் முன்னணி நடிகையுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. யார் தெரியுமா | Sivakarthikeyan Rashmika Join For Movie

டான் திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் சிபி சக்ரவத்தி. இவர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் தான் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கிறாராம்.