கீர்த்தி சுரேஷா? வேண்டவே வேண்டாம் என சிவகார்த்திகேயன் உதற இதுதான் காரணம்

keerthysuresh sivakarthikeyan SK20
By Edward Mar 05, 2022 01:20 PM GMT
Report

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகராக 3 படத்தில் நடித்து பிரபலமானவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் ஆரம்பித்த கதாநாயகன் அவதாரம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இடத்தை பிடித்த சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிமுருகன், ரெமோ போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார். அப்படத்திற்கு பிறகு இருவரின் கெமிஸ்ட்ரி செட்டாகியதால் சிவகார்த்திகேயனின் பேவரட் ஜோடியாக அமைந்தது.

தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் எஸ்கே20 படத்திற்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷின் பெயரும் அடிப்பட்டுள்ளது. அனுதீப் இயக்கத்தில் துவங்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

ஒரே நடிகையுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்தால் சில கிசுகிசுக்கள் எழும் என்பதால் தான் சிவகார்த்திகேயன் கீர்த்தியை உதறியுள்ளார். ஆனால் பி.சி ஸ்ரீராமே கீர்த்தி சுரேஷ் கச்சிதமாக இருக்கும் என்று கூறியும் சிவகார்த்தி கேட்கவில்லையாம்.