இந்த இரு சூப்பர் ஸ்டார் நடிகர்களை காப்பி அடிக்கும் சிவகார்த்திகேயன்!! காரணமே இதுதானாம்..
சின்னத்திரை தொலைக்காட்சியில் பணியாற்றி வெள்ளித்திரையில் தனக்கான ஒரு இடத்தினை பிடித்து முன்னணி நடிகராகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது ரஜினிகாந்த் சாயலில் உங்கள் நடிப்பின் ஸ்டைல் இருப்பது குறித்து கேள்வி கேட்டனர் பத்திரிக்கையாளர்கள்.

அதற்கு சிவகார்த்திகேயன், நான் அதிகமாக ஈர்க்கப்பட்ட மனிதரில் ஒருபர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1000, 2000 மேடைகளில் அவரை போல் பேசி புகழை சம்பாதித்து இருக்கிறேன்.
அதன் காரணமாக அவரின் சாயலை என்னில் பார்க்கமுடிகிறது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
மேலும் விஜய் சாயலில் கூட காப்பி அடிப்பதாக கூறியதற்கு அது எனக்கு தெரியாது பார்ப்பவர்களுக்கு அப்படி தெரிந்தால் அது அவர்களின் கருத்து என்று கூறியிருக்கிறார்.