அடேங்கப்பா சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவா இது... ஆளே மாறிட்டாரே..
Sivakarthikeyan
By Yathrika
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் கலக்க துடிக்கும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் சிவகார்த்திகேயன்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் கிடையாது, தனது சொந்த உழைப்பால் திறமையை பல மேடைகளில் வெளிக்காட்டி முதலில் சின்னத்திரையில் கலக்கினார்.
அதன்மூலம் வெள்ளித்திரை வர வாய்ப்பு கிடைக்க அப்படியே அந்த ஏணியை பிடித்துக்கொண்டு தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து மக்களை மகிழ்விக்க இப்போது முன்னணி நாயகனாக முன்னேறி உள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் மதராஸி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது சிவகார்த்திகேயன் தனது மகளின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சிறுவயதில் இருந்து இப்போது வரை எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மகளா இது ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.