லோகேஷ் கனகராஜ் சொன்னது வேற, அவரு நடந்துகிட்டது வேற.. சிவகார்த்திகேயன் ஓப்பன்

Sivakarthikeyan Lokesh Kanagaraj Maaveeran
By Edward Jul 13, 2023 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்று உச்சத்தில் இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். பிரின்ஸ் படத்தின் தோல்வியை தொடர்ந்து தற்போது மாவீரன் படத்தில் இயக்குனர் மனோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்துள்ளார்.

படம் நாளை தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மாவீரன் படத்தில் கமிட்டாகி நடிக்கும் போது சில விசயம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் சொன்னது வேற, அவரு நடந்துகிட்டது வேற.. சிவகார்த்திகேயன் ஓப்பன் | Sivakarthikeyan Told Lokesh Share Madonne Shoot

லோகேஷ் கனகராஜ் எங்கள் எல்லாருக்கும் நல்ல பழக்கம். மடோனுக்கு ரொம்ப பழக்கம், இருவரும் ஒன்றாக வேலை செய்திருக்கிறார்கள். லோகேஷ் என்னை பார்த்த போது சொன்னார், நான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடெண்ட் பிரதர், அப்டே பண்ணி அப்டே பண்ணிடுவேன் பிரதன். மடோன் பர்ஸ்ட் பென்ச் ஸ்டூடெண்ட் பிரதர்.

பர்ஸ்ட் பென்ச் ஸ்டூடெண்ட் எப்படி இருப்பாங்களோ அப்படி தான் படம் பண்ணுவான். அத மைண்ட்ல வெச்சுட்டு தான் ஷூட்டிங்கிற்கு நான் போனேன். ஸ்டூடெண்ட்லாம் இல்லை ஸ்ட்ரிக்ட், ஹெட் மாஸ்டர் மாதிரி.

யாரையும் ஷூட்டிங்கில் திட்டியது கிடையாது, ஆனா எல்லார்கிட்டயும் வேலையை வாங்கிடுவார் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.