தனுஷுடன் சிவகார்த்திகேயன் மோதலா? ஒரே ட்விட்டில் முற்றுப்புள்ளி
டிவியில் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிகரானவர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை சிவகார்த்திகேயனுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துவிட்டார் என்றாலும், அவரது கேரியரில் ஆரம்பகட்டத்தில் தனுஷ் தந்த ஆதரவு அதிகம் வளர்ச்சிக்கு உதவியது. ஆனால் ஒரு கட்டத்தில் தனுஷிடம் இருந்து விலகி வந்தார் சிவகார்த்திகேயன். தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் நடத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே பிரச்சனை இருக்கிறது என்றும், அதனால் தான் அவர்கள் பேசிக்கொள்வது கூட இல்லை என்று நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் ட்விட்
இந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லி சிவகார்த்திகேயன் ட்விட் செய்திருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் நடுவில் இருந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது போல என பேசி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் சமீபத்தில் தான் அருண் விஜய் உடன் சமரசம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy birthday @dhanushkraja sir
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 28, 2022
Have a great year ??