ஹோட்டல் நடிகை மாதிரின்னு சொன்ன சிவகுமார்!!திருந்தவே மாட்டீர்களான்னு விளாசிய பிரபலம்..
ஹோட்டல் நடிகை மாதிரி
தமிழ் சினிமாவில் 70, 80களில் கொடிக்கட்டி பறந்த டாப் நடிகர் சிவகுமார் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கருத்து தற்போது விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.

'ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி, வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி, வீட்டு சாப்பாடு தான் நிரந்தரம். ஒரு மாற்றத்திற்காக ஹோட்டலில் சாப்பிடலாம், ஆனால் தினமும் அப்படி சாப்பிட்டால் பைத்தியம் பிடித்துவிடும். எப்போதும் வீடு, மனைவி, குழந்தைதான் முக்கியம்' என்று கூறினார்.
நடிகைகள் குறித்து அவர் பேசியவிதம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கருத்துக்கு பலர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு டிவிட் போட்டு சிவகுமாரின் பேச்சை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

திருந்தவே மாட்டீர்களா
ஹோட்டல் சாப்பாடும் நடிகைகளும் ஒன்றா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா? பெண்கள் பற்றிய உங்கள் பார்வை இவ்வளவு கீர்த்தரமாந்தா? நடிகையை மணம் செய்த உங்கள் புதல்வர் இந்த கருத்தை ஏற்பாரா? ஏன் இப்படி அடிக்கடி உளறுகிறீர்கள்? திருந்தவே மாட்டீர்களா? என்று பதிவிட்டுள்ளார்.