இவரையும் விட்டுவைக்காத ரெட் கார்ட்!! வடிவேலுவை அடுத்து சினிமாவை விட்டே துறத்தப்படும் எஸ் ஜே சூர்யா..

S.J.Suryah TJ Gnanavel
By Edward Mar 08, 2023 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் குஷி படத்தினை இயக்கி அதிலும் வெற்றியை கண்டார்.

அதன்பின் அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கி நடித்தும் இருந்தார். அதன்பின் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பில் முழு ஆர்வம் கொண்டு நடிக்க ஆரம்பித்தா எஸ் ஜே சூர்யா.

இவரையும் விட்டுவைக்காத ரெட் கார்ட்!! வடிவேலுவை அடுத்து சினிமாவை விட்டே துறத்தப்படும் எஸ் ஜே சூர்யா.. | Sj Surah Act With Red Card From Some Issues

சமீபகாலமாக வில்லன் ரோலிலும் குணச்சித்திர ரோலிலும் நடித்து வரும் எஸ் ஜே சூர்யா இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆர்சி15 படத்தில் பிஸியாக நடித்தும் வருகிறார். ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் எஸ் ஜே சூர்யாவுக்கு ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் நடிக்க தடை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

. பல வருடங்களுக்கு முன் ஞானவேல் ராஜா ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் சம்பளத்தையும் வாங்கியிருக்கிறாராம். அப்பவே அட்வான்ஸ் தொகையை திருப்பி தர முன் வந்தாராம் எஸ் ஜே சூர்யா. ஆனால், தற்போது அட்வான்ஸ் கொடுங்க இல்லையென்றால் படம் கொடுங்கள் என்று ஞானவேல் ராஜா கேட்டுள்ளாராம்.

வாங்கிய அட்வான்ஸ் தொகை தருகிறேன் என்று எஸ் ஜே சூர்யா கூற, இல்லை அட்வான்ஸ் தொகையோடு வட்டியையும் சேர்த்து கேட்டிருக்கிறாராம் ஞானவேல் ராஜா.

இதனால் பிரச்சனையாகி, பேச்சுவார்த்தையின் போது தற்போதைக்கு ரெட் கார்ட் போடப்பட்டுள்ளதாம். வடிவேலுவை தொடர்ந்து தற்போது எஸ் ஜே சூர்யா, ரெட் கார்ட் பிரச்சனையை சந்தித்து இருப்பது கோடம்பாக்கத்தில் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.