நாக சைதன்யா முதல் மனைவி சமந்தா கிடையாதாம்? உண்மையை உடைத்த நடிகை..

samantha nagachaitanya
By Edward Feb 24, 2022 02:05 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பெரியளவில் பேசப்படும் நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடி போட்டு நடித்தார். அப்போது ஆரம்பித்த நட்பு இருவருக்கும் காதலாக மாறியது. அதன்பின்2017ல் திருமணம் செய்து கொண்டனர்.

நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து பல இடங்களில் இருவரின் காதல் கதைகளையும் பகிர்ந்து கொண்டு வந்தனர். அப்படி எங்கு சென்றாலும் கணவர் புராணம் பாடிய சமந்தா கடந்த ஆண்டு சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து கேட்டு பிரிந்தனர்.

சினிமாத்துறையே அதிர்ச்சியில் இருக்க என்ன காரணம் என்று பல குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா பிரபல நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்திய பேட்டியொன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்ப்போது நாக சைதன்யாவின் முதல் மனைவி யார் என்பதையும் சமந்தா போட்டுடைத்தார்.

"அவருக்கு pillow தான் முதல் மனைவி. அவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்றாலும் அந்த தலையணை நடுவில் இருக்கும்" என சமந்தா கூறி இருக்கிறார். இப்படியெல்லாம் கூறிவிட்டு ஏன்மா விவாகரத்து கேட்ட என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.