நடிகை த்ரிஷாவின் பெயரில் ஒரு ஊர்.. அதில் கூட விஜய், அஜித்தா? ஷாக்கிங் விஷயம்
த்ரிஷா
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது வரும் ஜூன் 5 - ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இப்படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அதிர்ச்சி விஷயம்
பொதுவாக நடிகைகள் பெயரில் கோவில்கள் கட்டி பார்த்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஒரு நடிகையின் பெயரில் ஒரு ஊரே இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், நடிகை த்ரிஷா பெயரில் உள்ள ஊர் ஒன்றை அவரது ரசிகர் கண்டுபிடித்து இருக்கிறார்.
அந்த ஊர் பெயர் ‘Vijayak Trisha'. அந்த ஊர் லடாக்கில் உள்ள நுப்ரா வேலியில் இருந்து உலகத்தின் உயரமான பேஸ் கேம்ப் என அழைக்கப்படும் சியாச்சின் பேஸ் கேம்புக்கு செல்லும் வழியில் உள்ளதாம்.
தற்போது, ரசிகர்கள் அந்த ஊர் பெயரில் விஜய் (vijay), அஜித் குமார் (AK) பெயரும் இருப்பதாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.