நின்றுபோன ஸ்மிருதி மந்தனா திருமணம்!! வருங்கால கணவரின் சகோதரி விளக்கம்..
ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி வீராங்கனை, உலக கோப்பை வெற்றிக்கு பின் தன்னுடைய காதலர் பலாஷ் முச்சல் என்பவரை நிச்சயம் செய்தார். அதன்பின் இருவரும் விரைவில் திருமணம் செய்வதாக செய்திகள் வெளியான நிலையில் நவம்பர் 23 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக திருமண பத்திரிக்கை வெளியானது.

திருமணத்திற்கான கொண்டாட்டத்தில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சல் இருந்து வந்தனர். 23 ஆம் தேதி திருமணம் நடப்பதற்கு முன் ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், திருமணத்தை தள்ளி வைத்ததாக தகவல் வெளியாகியது.
இதனையடுத்து மணமகன் பலாஷ் முச்சலுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் திருமணம் தொடர்பாக தான் பகிர்ந்த அனைத்து பதிவுகளையும் ஸ்மிருதி மந்தனா டெலீட் செய்தார்.

சகோதரி விளக்கம்
இந்நிலையில், பலாஷ் முச்சல் குறித்து சில தவறான செய்திகள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. இதனைதொடர்ந்து ஸ்மிருதி மந்தனாவின் வருங்கால கணவரின் சகோதரி பாலக், இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தை உடல்நிலை காரணமாக அவரது திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தங்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பாலக் முச்சல் தெரிவித்துள்ளார்.