ஆதாரத்தை காட்டுகிறேன் நீங்க பாக்குறீங்களா!! கோபத்தில் நடிகை சினேகா..
புன்னகை அரசியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சினேகா திருமணத்திற்கு பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சினேகாவிடம் பேட்டியொன்றில், ஹீரோக்களுக்கு நீங்கள் அக்காவை போல் இருக்கிறீர்கள் என்று கூறி வருவது பற்றி கேட்கப்பட்டது.
இதனால் கோபப்பட்ட சினேகா, நீங்கள் யாருக்கு அக்கா மாதிரி இருக்கேன் என்று கூறுகிறீர்கள் என்றும் இப்போது வரை இளமையுடன் தான் இருக்கிறேன், உடலையும் குறைத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கும் என்னை நீங்கள் எப்படி அக்கா போல் காட்சியளிக்கிறேன் என்று கூறலாம். மேலும், சூர்யா, ஜீவா, ஜெய், சிவகார்த்திகேயனுடன் நடித்திருப்பதை தான் தொகுப்பாளர் கேட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு சினேகா, ஷாம்க்கு ஜோடியாகவும் தனுஷுக்கு ஜோடியாக இருந்திருக்கிறேன், அதற்கு என்ன சொல்கிறீர்கள். தனுஷும் என்னுடன் நடித்த நடிகைகளில் சினேகா தான் சரியான ஜோடி என்று கூறியிருக்கிறார்.
அதற்கான ஆதாரத்தை காட்டுகிறேன் நீங்கள் பார்க்கிறீர்களா என்று தொகுப்பாளரிடம் கோபப்பட்டு இருக்கிறார். இப்போதும் நான் ஹீரோயினாக நடிப்பேன் என்றும் காட்டமாக தெரிவித்திருக்கிறார் நடிகை சினேகா.