தனிமையில் மனைவிக்கு முத்தம் மழை! சினேகனை கண்டித்த கன்னிகாவின் வீடியோ..

Serials Gossip Today
By Edward May 19, 2022 11:45 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் கவிஞர் சினேகன். பல படங்களுக்கு பாடலாசிரியராக இருந்தும் சில படங்களில் நடிகராகவும் நடித்திருந்தார். இடையில் வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார்.

அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு கட்டிபிடி வைத்தியர் என்ற பெயரோடு இரண்டாம் இடத்தினையும் பிடித்தார். நிகழ்ச்சி பிறகு தான் காதலித்து வந்த சொந்தக்கார பெண் மற்றும் சீரியல் நடிகையாகிய நடிகை கன்னிகாவை கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றார். கணவர் நிகழ்ச்சி உள்ளே இருக்கும் போது சினேகன் மனைவி சுற்றுலா சென்று நாட்களை கழித்து வந்தார்.

பின் சினேகன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா சமீபத்தில் லைவ் சாட்டில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது தான் வரைந்த ஓவியத்தை கணவர் சினேகனிடம் காட்டி நன்றாக இருக்கிறதா என்று கேட்டுள்ளார். இதற்கு சினேகன் உன்னைவிட அழகாக இருக்கிறது என கூறி கன்னிகா கன்னத்தில் முத்தமிட்டார்.

உடனே கன்னிகா, இப்படியெல்லாம் பண்ணாதீங்க. இப்படி முத்தம் கொடுக்குற வீடியோவை போடமாட்டேன்னு இருக்கேன். ஏன்னா, கெட்ட வார்த்தையில் அசிங்கமா திட்டுறாங்க என்று கூறியுள்ளார்.