விவாகரத்து வதந்திக்கு பின் ஒரே ரொமான்ஸ் தான்!! சினேகா - பிரசன்னாவின் புத்தாண்டு கொண்டாட்டம்..

Prasanna Sneha
By Edward Jan 03, 2023 06:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90காலக்கட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசி என்றும் பேர் எடுத்து பிரபலமானவர் நடிகை சினேகா.

விவாகரத்து வதந்தி

முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ள சினேகா கடந்த 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயாகினார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும் படங்களில் குணச்சித்திர ரோலிலும் நடித்து வருகிறார்.

விவாகரத்து வதந்திக்கு பின் ஒரே ரொமான்ஸ் தான்!! சினேகா - பிரசன்னாவின் புத்தாண்டு கொண்டாட்டம்.. | Sneha Prasanna Celebrate Newyear In Dubai Video

சமீபத்தில் 10 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ள விவாகரத்து பெறவுள்ளார் சினேகா என்று வதந்தி செய்திகள் பரவியது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சில நாட்களாக கணவர் பிரசன்னாவுடன் நெருக்கமாக போட்டோஷூட் எடுத்து பதிலடி கொடுத்து வருகிறார்.

புத்தாண்டு கொண்டாட்டம்

2023 ஆம் ஆண்டினை வரவேற்பு கொண்டாட்டத்தை துபாயில் கணவருடன் கொண்டாடியுள்ளார். துபாய் பிரபல அடுக்குமாடி கட்டடமான Burj Khalifa இருந்து கொண்டு கொண்டாடியுள்ளார்கள். அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விவாகரத்து வதந்திகளை கண்டுகொள்ளாமல் கணவருடன் ஒரே ரொமான்ஸ் செய்து வருகிறார் சினேகா.

GalleryGalleryGalleryGallery