நடிகை சினேகா - பிரசன்னா விவாகரத்து செய்திக்கு உண்மையான காரணம் இதுதான்!! வெளியான தகவல்..

Prasanna Sneha Gossip Today Bayilvan Ranganathan Divorce
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

சினேகா - பிரசன்னா

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா. முன்னணி நடிகையாக இருந்து வந்த சினேகா திருமணத்திற்கு பிறகு லீட் ரோலில் நடிப்பதை தவிர்த்து விளம்பர படம், குணச்சித்திர ரோல் என்று நடித்து வந்தார்.

இடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் சினேகா - பிரசன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடியாக சினேகா கணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டும் பிரசன்னா அப்படியான செய்தி பொய் என்றும் கூறியிருந்தார்.

நடிகை சினேகா - பிரசன்னா விவாகரத்து செய்திக்கு உண்மையான காரணம் இதுதான்!! வெளியான தகவல்.. | Sneha Prasanna Divorce Rumour Reason Bayilvan Open

பயில்வான்

இந்நிலையில் இதற்கான உண்மையான காரணமே பிரபல தொலைக்காட்சி சேனல் தான் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அந்தரங்கம் பற்றி வெளிப்படையாக பேசிவரும் பயில்வான், சினேகா - பிரசன்னா விவாகரத்து செய்யும் அளவிற்கு போகிறவர்கள் கிடையாது. அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றும் இரு குழந்தைகள் இருக்கும் போது அப்படியான் மனநிலைக்கு வராதவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

நடிகை சினேகா - பிரசன்னா விவாகரத்து செய்திக்கு உண்மையான காரணம் இதுதான்!! வெளியான தகவல்.. | Sneha Prasanna Divorce Rumour Reason Bayilvan Open

தொலைக்காட்சி சேனல்

மேலும் இதற்கு காரணம் பிரபல தொலைக்காட்சி ஒன்று தான் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த தொலைக்காட்சி சேனல் ஒரு நிகழ்ச்சியை நடத்திக்கொடுக்க சினேகாவிடம் கேட்டுள்ளனர். தனியார் தொலைக்காட்சியிடம் பெரிய தொகையை சினேகா கேட்டதாகவும் கடுப்பில் இருந்த அந்த தொலைக்காட்சி இப்படியான விவாகரத்து தகவலை பரப்பிவிட்டதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேனல் தான் சினேகா வாழ்க்கையில் விளையாடியதா என்று ரசிகர்கள் யார் அந்த சேனல் என்று கேட்டு வருகிறார்கள்.

Gallery