பிரசன்னாவை விவாகரத்து செய்யும் சினேகா.. எதையும் கண்டுக்கொள்ளாமல் குத்தாட்டம் போட்ட நடிகை
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
காதலித்து திருமணம்
அதன்பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்றார். தற்போது மீண்டும் வெள்ளித்திரை சின்னத்திரை என்று ரிஎண்ட்ரி கொடுத்து வருகிறார். அப்படி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகை சினேகா பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது.
விவாகரத்து ரூமர்
ஆனால் தாங்கள் ஒற்றுமையாக சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறோம் என்று கணவர் பிரச்சன்னாவுடன் எடுத்த புகைப்படத்தை சினேகா வெளியிட்டார். இதனை தொடர்ந்து இந்த விசயம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சினேகா குத்தாட்டம் போட்டுள்ளார். தன் திருமண விவாகரத்து ரூமர் செய்திகளை கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் சினேகா. இதுகுறித்து இருவரும் கூடிய சீக்கிரமே விளக்கம் அளித்தால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வந்துவிடும் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
???
— Zee Tamil (@ZeeTamil) November 14, 2022
DanceJodiDanceReloaded | Every Saturday and Sunday 8 PM#DanceJodiDance #DJD #DJDReloaded #DanceJodiDanceReloaded #ZeeTamil #BabaBhaskar #Sneha #Sangeetha #Vijay pic.twitter.com/f4P3Qha68h