10 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரசன்னா விவாகரத்து? நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்

Prasanna Sneha Gossip Today
By Edward Nov 14, 2022 07:45 AM GMT
Report
375 Shares

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரை எடுத்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதன்பின் 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பின் விஹான், ஆத்யந்தா என்ற இரு குழந்தைகளை பெற்றார். தற்போது மீண்டும் வெள்ளித்திரை சின்னத்திரை என்று ரிஎண்ட்ரி கொடுத்து வருகிறார்.

அப்படி சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகை சினேகா பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது.

10 வருட திருமண வாழ்க்கையை இருவரும் முடித்துக்கொள்ளவுள்ளதாக பரவிய செய்தியை நடிகை சினேகா கேள்விப்பட்டுள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சினேகாவுடன் பிரசன்னா நெருக்கமாக முத்தக்கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

Gallery