என் பக்கத்தில் வந்து அதை செய்ங்க!! ஓபனாக பேசிய நடிகை ரித்திகா சிங்..
ரித்திகா சிங்
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தில் எழில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங்.
அதன்பின், விஜய் சேதுபதி ஜோடியாக ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என தொடர்ந்து படங்கள் நடித்தவர், கடைசியாக ரஜினியின் 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். சமீபகாலமாக கிளாமர் லுக் போட்டோஷூட்டில் அசத்தும் ரித்திகா சிங், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பேசிய விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அதில், தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை தேர்வு செய்ய வேண்டுமென்றால் நான் ரஜினிகாந்தை செய்வேன். உயர்ந்த நட்சத்திரமாக இருந்தாலும், எவ்வளவு அன்பு, எவ்வளவு பணிவு, எவ்வளவு எளிமையை கொண்டிருக்கிறார் என்பதுதான் பெரிய ஆச்சரியம் என்று கூறியிருக்கிறார்.
மேலும், உங்களை யாராவது சைட் அடித்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, நான் அதற்கு கொஞ்சம் பக்கத்தில் வந்து பாருங்களேன் என்பேன், தைரியம் இருந்தால் என் அருகில் வரட்டும் என்று ரித்திகா கூறியிருக்கிறார்.