என் அம்மாவே அந்த விஷயத்தில் என்னை அசிங்கமா பேசினாங்க... சீரியல் நடிகை வருத்தம்
Tamil Cinema
Tamil TV Serials
By Yathrika
சீரியல் நடிகை
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் சுகன்யா. இவர் அரசியை வைத்து செய்த வேலைகள் எல்லாம் தெரியவர குடும்பமே இவர் மீது கோபத்தில் தான் உள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இவரது கதாபாத்திரத்தில் அவ்வளவு ஸ்கோப் இல்லை.
இந்த நிலையில் இவர் சன் நட்சத்திர விருது விழாவில் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர், இது எல்லாம் மூஞ்சியா, நீ நடிச்சு எங்கே ஜெயிக்க போற, இது எல்லாம் வேலையில்லாத வேலை என என் அம்மாவே விமர்சித்தாங்க.
ஆனால் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள் என கண் கலங்கி பேசியுள்ளார்.