தியேட்டரில் இருக்கும் போது அந்த இடத்தில் கை வைத்தார்.. பகிர் கிளப்பிய தனுஷ் பட நடிகை

Dhanush Actors Sonam Kapoor Tamil Actors Actress
By Dhiviyarajan Jun 11, 2023 08:00 AM GMT
Report

2007 -ம் ஆண்டு வெளியான சாவரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாணவர் தான் சோனம் கபூர். இவர் தனுஷின் முதல் இந்தி படமான அம்பிகாபதி படத்திலும் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மனதில் பிரபலமானார்.

பிரபல நடிகையாக வலம் வந்த இவர் சமீப காலமாக படங்கள் பெரிதளவில் ஓடாத நிலையில், சிறு சிறு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சோனம் கபூர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் 13 வயதில் இருக்கும் போது தியேட்டருக்கு நண்பர்களுடன் சென்று இருந்தேன். நான் அங்கு இருந்து வெளியே செல்லும் போது ஒரு நபர் என் மார்பின் மீது கை வைத்து விட்டு ஓடிவிட்டார். அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருந்தேன் என்று சோனம் கபூர் வேதனையை பகிர்ந்துள்ளார்.