பார்ட்டியில் போதை மருந்து கொடுத்து கற்பழிப்பு.. இரவு பார்ட்டியில் பிக்பாஸ் நடிகை மரணம்
பாலிவுட் சினிமா நடிகையாகவும் பாஜக கட்சியின் தலைவருமான சோனாலி போகத் கடந்த திங்களன்று கோவாவில் தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கந்து கொண்டுள்ளார். இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட சோனாலி போகத் மர்மமான முறையில் இரவில் மரணம் அடைந்தார்.

கடந்த பிக்பாஸ் 14வது சீசனில் வைல்ட் கார்ட்டில் எண்ட்ரி கொடுத்த சோனாலி போகத்தின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சோனாலி மரணம் அடைந்த முன்பு தன் தாயாருக்கு கால் செய்து எனக்கு எதிராக சதி நடக்கிறது என்று கூறியும் சாப்பிட்ட பின் உடல் நிலை சரியில்லை என்றும் கூறியிருக்கிறாராம்.
உடற்பரிசோதனை செய்யப்படுவதாக கூறி சோனாலியின் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு, தன் சகோதரியை இரு கூட்டாளிகள் இணைந்து கொலை செய்ததாகவும் அவர் கூறியிருந்தார். இறப்பதற்கு முன் என் தாயாரிடம் சோனாலி பேசியிருந்ததையும் கூறியுள்ளார்.
மேலும் சோனாலியை அவரது கூட்டாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் போதை மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன் கொடுமை செய்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
I've submitted a written complaint in Anjuna PS, Goa.
— ANI (@ANI) August 24, 2022
This was a pre-planned murder. We've doubts on two people including her personal assistant. I demand a CBI investigation into her death: Rinku, late Sonali Phogat's brother
Phogat died of a suspected heart attack in Goa y'day pic.twitter.com/i74Voc967g