கர்ப்பமான நடிகை? தனுஷ் பட நடிகை விட்டில் கோடிக்கணக்கில் ஆட்டைய போட்ட கும்பல்..
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சோனம் கபூர். முன்னணி நடிகையாக இருந்த சோனம் கபூர் நடிகர் தனுஷுடன் ராஞ்சானா என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
இதன்பின் கடந்த 2018ல் ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்தார். அதன்பின்பும் படங்களில் நடித்து வந்த சோனம் கபூர் சமீபத்தில் கர்ப்பமாகினார். தற்போது கர்ப்பகாலத்தில் இருந்து கொண்டு கணவருடன் சேர்ந்து போட்டோஷூட் எடுத்தும் வருகிறார்.
இந்நிலையில் சோனம் கபூர்-ஆனந்த் அஹுஜா வீட்டில் 2.4 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயுள்ளதாம். டெல்லியில் சோனம் கபூர் தன் கணவருடன் வசித்து வருகிறார். கொள்ளை போனதை அடுத்து டெல்லி துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலிஸிடம் கொடுத்த புகாரில், கடந்த பிப்ரவரி 11 ஆம்தேதி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தினை சரிப்பார்க்கும் போது 1.4 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போனதை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீட்டில் வேலை செய்யும் 25 நபர்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.