அவன்லாம் நடிகனா? அண்ணியாவதற்கு முன் தனுஷை கேவளமாக பேசிய மாமியார்?

dhanush selvaraghavan puthupettai soniaagarwal tamilactress kaadhalkondein
By Edward Mar 31, 2022 02:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். தன்னுடைய தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜாவின் வற்புறுத்தலின் பேரில் சினிமாத்துறைக்கு வந்தார் தனுஷ்.

ஆரம்பகாலகட்ட சினிமாவில் தன்னை பார்த்து பலர் சிரித்தார்கள் நீயெல்லாம் ஒரு நடிகனா என்று கிண்டல் செய்து அசிங்கப்படுத்தினார்கள். அதையெல்லாம் தாண்டி தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளே என்று தனுஷ் பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

துள்ளுவதோ இளமை படத்திற்கு பின் அவரின் திறமைக்கு சினிமா வாழ்க்கை அவருக்கு மிகப்பெரிய இடத்தினை கொடுத்துள்ளது. அப்படி சமீபத்தில் அதையெல்லாம் தாண்டி நல்ல ஒரு நிலைக்கு வந்தப்பின் மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்தும் செய்து பிரிந்துள்ளார்.

இந்நிலையில் தனுஷுட காதல் கொண்டேன் புதுப்பேட்டை படத்தில் நடித்ததை பற்றி சில விஷயங்களை, தனுஷின் முன்னாள் அண்ணியும் நடிகையுமான சோனியா அகர்வால் பகிர்ந்து கொண்டு பேசியுள்ளார். என்னுடைய கேரியரில் காதல் கொண்டேனை எப்போதும் மறக்க முடியாது எனவும், இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தான் மிகவும் சவாலாக இருந்தது.

படத்தின் போது தனுஷை பார்த்த என் அம்மா இவரா நடிகர் என்று கேட்டு ஷாக்காகி பல கேள்விகளை எழுப்பினார். அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று நான் கூறினேன் என தெரிவித்தாராம் சோனியா அகர்வால். அதேபோல் படமும் மிகப்பெரிய ஹிட்டானது.