பாரில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய சோனியா அகர்வால்!! ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன்..
தெலுங்கு சினிமாவில் நீ பிரேமகை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி 2003ல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான காதல் கோட்டை படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சோனியா அகர்வால்.
இப்படத்தினை தொடர்ந்து செல்வராகவனின் 7ஜி ரெய்ன்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து. செல்வராகவன் இயக்கத்தில் பல படங்களில் நடித்து அவருடன் காதல் ஏற்பட்ட திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒருசில ஆண்டுகள் செல்வராகவனை விவாகரத்து செய்து பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது மீண்டும் தன் ரீஎண்ட்ரியை கொடுத்து, கிளாமர் லுக்கிற்கும் மாறியிருக்கிறார் சோனியா அகர்வால்.
சமீபத்தில் அவரது 41வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார். நெருங்கிய நண்பர்களுக்கு பாரில் பார்ட்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறார் சோனியா அகர்வால்.
பார்ட்டிக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.