குடும்பத்தோடு அந்த விசயத்துக்காக டார்ச்சர் செய்தார்கள்!! செல்வராகவனுடன் விவாகரத்து குறித்து பேசிய நடிகை சோனியா..
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது காதல் கொண்டேன், 7ஜி ரெய்ன்போ காலணி போன்ற படங்கள். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை சோனியா அகர்வால். படத்தில் கதாநாயகியாக நடித்ததோடு செல்வராகவனை காதலித்தும் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். செல்வராகவன் இரண்டாம் திருமணம் செய்து குழந்தை குட்டியென இருக்கும் நிலையில் சோனியா அகர்வால் இன்னும் இரண்டாம் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது நடிப்பில் ஆர்வமுடன் நடித்து வரும் சோனியா அகர்வால், விவாகரத்து பற்றி வாய்ந்திறந்துள்ளார். திருமணத்திற்கு பின் செல்வராகவன் குடும்பத்தினர் நடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குடும்பமாக சேர்ந்து என்னுடைய அனைத்து முடிவுகளை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் இரு வருஷம் ஓய்வு எடுத்து நடிப்பை விட்டுவிலகியதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இரு ஆண்டுகள் கழித்து செல்வாவிடம் நடிப்பு பற்றி கேட்கும் நேரத்தில் தான் குஷ்பூ மூலம் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தான் விவாகரத்து செய்தேன் என்று சோனியா அகர்வால் பல ஆண்டு ரகசியத்தை உடைத்துள்ளார்.