சூரி லிப் காட்சியில் நடிக்கிறாரா.. அவரை சொன்ன தகவல்!!
காமெடியான நடித்து வந்த நடிகர் சூரி, தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கருடன் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றார். இரண்டு நாட்களில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
விடுதலை 1 மற்றும் 2, கொட்டுக்காளி படங்கள் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்க்ரீன் செய்யப்பட்டது. மேலும் பெர்லின் திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழுமலை திரைப்படம் ஸ்க்ரீன் செய்யப்பட்டது. ஸ்க்ரீனிங் செய்யப்பட்ட அனைத்து படங்களிலும் சூரி நடித்து, ரசிகர்களை வியக்கவைத்து இருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் சூரி, சசி குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது சூரயிடம், நீங்கள் சினிமாவில் அடுத்த லெவெலுக்கு போயிட்டீங்க .. இனி அடுத்து ஹீரோயின் உடன் லிப் காட்சியில் நடிப்பிங்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு, கதைக்கு தேவைப்பட்டால் சூரி நடிப்பார் என்று சசி குமார் தமாஷாக பேசினார். இதற்கு சூரி, அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று பதில் அளித்துள்ளார்.
