தலையில் மண்னை அள்ளிப்போட்டு கொண்ட சூரி! அந்த ரூட்டே வேண்டாமாம்?
soori
annaatthe
By Edward
தமிழ் சினிமாவின் பல காமெடி நடிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு காமெடி ரூட்டில் மக்களை கவர்ந்தவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சீனில் நடித்ததால் பரோட்டா சூரி என அழைப்பட்டு வருகிறார்.
முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில்நடித்து வந்த சூரி மார்க்கெட் அதிகரிக்க கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். ஹீரோவாக அறிமுகமாகி நடித்ததில் இருந்து பல படங்களில் காமெடி கதாபத்திரத்தினை தவறவிட்டுள்ளாராம்.
இதனால் ஹீரோ லைஃபை தூரம் தள்ளி மீண்டும் காமெடியில் ஆர்வம் காட்டவுள்ளாராம். இவரை போல் சந்தானமும் இப்படி ஹீரோவாக நடித்து பல படங்கள் தோல்வியையே சந்தித்து வருகிறார்.