திருமணமாகி ஒரே வருடத்தில் விபத்தில் மரணம்! நடிகை செளந்தர்யா நடிக்க இருந்த சிரியல்..

Devayani Soundarya Serials
By Edward Jun 02, 2022 10:46 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை செளந்தர்யா. தமிழில் பொண்ணுமணி படத்தின் மூலம் அறிமுகமாகிய செளந்தர்யா, முத்து காளை, சேனாதிபதி, காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்க தங்கம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ஈர்த்து வந்தார்.

இதையடுத்து 2003ல் ஜி எஸ் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்ட செளந்தர்யா 2004ல் தன் சகோதரருடன் எலிகேப்டரில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நடிகை செளந்தர்யா சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்தும் வந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலில் துவங்கிய கோலங்கள் சீரியலில் நடிகை தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆனால் தேவயானிக்கு முன்பாக முதலில் நடிக்க இருந்தது நடிகை செளந்தர்யா தானாம். இயக்குனர் திருச்செல்வம் முதலில் செளந்தர்யாவிடம் பேச்சு வார்த்தை செய்த போது அரசியலில் இருந்ததால் சீரியலில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாம். அதனால் தான் நடிகை தேவயானியை நடிக்க வைத்தாராம்.