கூலி படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்கள்.. மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ன கூறியுள்ளார் பாருங்க

Rajinikanth Soundarya Rajinikanth
By Kathick Feb 05, 2026 02:30 AM GMT
Report

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே தனி ஆளுமை செலுத்தி வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் கூலி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்தன. அதுமட்டுமின்றி அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டது.

கூலி படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்கள்.. மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ன கூறியுள்ளார் பாருங்க | Soundarya Rajinikanth Talk About Coolie Movie

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூலி படம் குறித்து பேசியுள்ளார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். முதலில் நிகழ்ச்சியின் நெறியாளர் 'கூலி படம் எனக்கு பிடித்து இருந்தது, அதற்காக என்னை தாக்கினார்கள். உங்களுக்கு படம் பிடித்து இருந்ததா' கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த சௌந்தர்யா, "எனக்கு கடைசி 10 நிமிடங்கள் பிடித்து இருந்தது. அதில் இளம் லுக்கில் de-aging செய்து காட்டி இருப்பார்கள். ஆனால் தலைவர் ரஜினி ரசிகையாக அவரிடம் இருந்து இன்னும் நான் எதிர்பார்க்கிறேன். எனக்கு பிடித்து இருந்தது, ஆனால் எனது டாப் ஃபேவரைட் படமாக அது இருக்காது. தற்போதெல்லாம் மக்கள் அதிகம் வன்முறையை ரசிப்பதில்லை என்பது என் கருத்து" என சௌந்தர்யா கூறியுள்ளார். 

கூலி படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்கள்.. மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ன கூறியுள்ளார் பாருங்க | Soundarya Rajinikanth Talk About Coolie Movie