அப்பா பெற்றிருந்தால்! விருதுவிழாவில் எஸ்பிபி பற்றி நெகிழ்ச்சியாக பேசிய மகன் எஸ்பி சரண்..

spb spcharan spbalasupramaniam
By Edward Nov 26, 2021 08:55 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இசையின் ஜாம்பவனாக இருந்தவர் எஸ்பி பாலசுப்ரமணியம். பல ஆயிரம் பாடலுக்கு சொந்த காரனாக இருந்து நம்மை இசையில் இழுத்து வைக்கும் குரல் அவருக்கு. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி மரணமடைந்தார்.

இந்திய சினிமாவிற்கே அதிர்ச்சி கொடுத்த அவர் பல விருதுகளுக்கு சொந்தக்காரனாக இருந்தார். சமீபத்தில் இந்திய அரசு அவரை கவுரவிக்கும் வண்ணம் பத்ம விபூஷன் விருதினை எஸ்பிபிக்கு கொடுத்துள்ளது. விருதினை அவரது மகன் வாங்கி பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, விருதினை வாங்க அப்பா இருந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பார். கலைஞர்களை பாராட்டி கவுரவிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று உருகி பேசியுள்ளார்.