விஜய் - திரிஷா பற்றி பேசியதை தெரிந்தேதான் பேசினேன்..வைரல் வீடியோவுக்கு சமுத்திரக்கனி விளக்கம்..

Samuthirakani Vijay Trisha Gossip Today
By Edward Mar 25, 2026 07:45 AM GMT
Report

விஜய் - திரிஷா

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சமீபத்தில் தன் கணவர் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி விவாகரத்து மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஒரேமாதிரியான நிறத்தில் ஆடையணிந்து ஜோடியாக சென்று அதிர்ச்சி கொடுத்தார். இந்த விவகாரம் பெரியளவில் பேசுபொருளாகியதை அடுத்து, ரசிகர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பலரும் இதுகுறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

விஜய் - திரிஷா பற்றி பேசியதை தெரிந்தேதான் பேசினேன்..வைரல் வீடியோவுக்கு சமுத்திரக்கனி விளக்கம்.. | Spoke About Vijay Trisha Samuthirakani Explains

சமீபத்தில் கூட நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, இதெல்லாம் விளையாட்டா? யாரை பழிவாங்க இதை செய்கிறார்? ஒரு பிரச்சனை நடக்கும்போது நடிகையை கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும், சொந்த கட்சிக்காரர்களே இதற்குமேல் முட்டுக்கொடுக்க முடியாது என்று புலம்புகிறார்கள் என்று பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சமுத்திரக்கனி அளித்த பேட்டியொன்றில் இதுகுறித்த கேள்வி கேட்கப்பட்டது.

விஜய் - திரிஷா பற்றி பேசியதை தெரிந்தேதான் பேசினேன்..வைரல் வீடியோவுக்கு சமுத்திரக்கனி விளக்கம்.. | Spoke About Vijay Trisha Samuthirakani Explains

எனக்கு முன்பே தெரியும்

அதற்கு சமுத்திரக்கனி, வீடியோ எடுக்கிறார்கள் என்று எனக்கு முன்பே தெரியும். முன்னுரையை அந்த தம்பி எடுக்கவில்லை, முடிவுரையை மட்டும் தான் எடுத்தான், சரி எடுக்கட்டும் என்று விட்டுவிட்டேன். எனக்கு உள்ளே ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத்தெரியாது.

சந்தோஷமோ, வலியோ, வேதனையோ அதை அப்படியே பிரதிபலித்துவிட்டு நான் அடுத்த தளங்களுக்கு சென்றுவிடுவேன். அது வந்துவிட்டது, அதற்கு மேலே மானே தேனே எல்லாம் சேர்த்து தம்பிகள் வேலையை பார்த்துவிட்டார்கள். அதனை நான் ஒரு குற்றமாக எல்லாம் நினைக்கவில்லை. பேசிவிட்டு பின் வருத்தமாகவும் நினைக்கவில்லை, என் மனதிற்கு பட்டதை பேசினேன் என்று சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.