ஸ்ரீலீலா நடனத்திற்கு பின்னால் இந்த டாப் நடிகர் உள்ளார்.. தாய் பகிர்ந்த ஷாக்கிங் விஷயம்
ஸ்ரீலீலா
நடனம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நட்சத்திரங்களில் ஒருவர் ஸ்ரீலீலா. கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர், தற்போது பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அதே போல் பாலிவுட்டிலும் Aashiqui 3 படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
ஷாக்கிங் தகவல்
டோலிவுட்டில் நட்சத்திர கதாநாயகியாக இருக்கும் ஸ்ரீலீலா, ஒரு நடனக் கலைஞராக மாறியதற்கு ஜூனியர் என்.டி.ஆர்தான் காரணம் என்று அவரது அம்மா பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " 1997-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் நடனமாடினார். நான் அங்கு சென்றிருந்தேன்.
அப்போது அவரிடம் எனக்கு மகள் பிறந்தால் அவளை உன்னை போன்று நடனமாட வைப்பேன் என்று கூறினேன். அதேபோல் என் மகளை நடனக் கலைஞராக்கினேன்" என்று தெரிவித்துள்ளார்.