கைநழுவும் படவாய்ப்புகள்!!! ஸ்ரீலீலா வாய்ப்பை தட்டிப்பறிக்கும் நடிகைகள்..
ஸ்ரீலீலா
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாகவும் அதிகம் சம்பளம் பெரும் நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஸ்ரீலீலா.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ரீலீலாவுக்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் கைநழுவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகில் அக்கினேனி நடிப்பில் வெளியான லெனின் மற்றும் அனகனகா ஒக ராஜு போன்ற படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை ஸ்ரீலீலா தவறவிட்டுள்ளாராம். இரண்டு படங்களுமே இந்த ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதுதவிர, விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தில் முதலில் ஸ்ரீலீலா கமிட்டாகி வெளியேற, பின் பாக்யஸ்ரீ போர்ஸ் கமிட்டாகி நடித்தார். அதேபோல் மற்றொரு பெரிய வாய்ப்பும் விட்டுபோயுள்ளதாம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தின் கதாநாயகியாக ஸ்ரீலீலாவிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அந்த ரோலுக்கு கயடு லோஹர் ஒப்பந்தமாகியுள்ளாராம். அப்படி இருந்தாலும் ஸ்ரீலீலா தனுஷின் ஓம் : சாப்டர் 1 உதிரம், தி பிளட் அவு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.