10 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாஸி...

Actors Divorce Tamil Actors Manjummel Boys
By Jai Sep 14, 2026 03:30 AM GMT
Report

ஸ்ரீநாத் பாஸி

சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரவி மோகன், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் மனைவிகளை பிரிந்தனர். இவர்கள் வரிசையில் அடுத்ததாக தன்னுடைய மனைவியை பிரிவதாக மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் அறிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

10 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாஸி... | Sreenath Bhasi Divorce After 10 Years Of Marriage

மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான ஸ்ரீநாத் பாஸி, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் விழும் சுபாஷ் ரோலில் நடித்திருந்தார். கடந்த 2016ல் திருவனந்தபுரத்தை சேர்ந்த ரீத்து ஜக்காரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப்பின் தான் சினிமாத்துறைக்கு வந்த ஸ்ரீநாத் பாஸி, திருமணமாவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்களாக இருந்துள்ளனர். அதன்பின் தம்பதிகளான இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றுள்ளார்கள்.

10 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாஸி... | Sreenath Bhasi Divorce After 10 Years Of Marriage

இதுகுறித்து ஸ்ரீநாத் பாஸி, விவாகரத்துக்குப்பின் நான் இப்போது என் பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். 2024ல் என்னுடைய மனைவியை பிரிந்தேன், இது யாருக்கும் தெரியாது, இப்போது தான் முதன்முதலில் பேசுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.