ரஜினி உடன் காதல் கிசுகிசு.. கமலுடன் ரகசிய திருமணம்!! சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீ தேவி
80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ தேவி. இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட செய்யாறு பாலு நடிகை ஸ்ரீ தேவி பற்றி பல தகவல்களை பகிர்ந்தார். அதில் அவர், "ஸ்ரீ தேவியின் மரணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இன்னும் அதை பற்றிய தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது".
"ஸ்ரீ தேவிக்கு பதினாறு வயதினிலே நல்ல பேரை பெற்று தந்தது. எல்லாரும் நம்ப ஒரு மயிலு என்று தான் அழைத்தார்கள். ஸ்ரீ தேவி ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீ தேவி கமல், ரஜினி உடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டார்".
"கமலும் ஸ்ரீ தேவியும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர், இருவரும் ஒரே வீட்டில் இருந்து வந்ததாக தகவல்கள் அப்போதைய பத்திரிகைகளில் வெளிவந்தது. ஆனால் இந்த மாதிரியான தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் ஸ்ரீ தேவி தனக்கு தங்கை போன்றவர் என்றும் கமல் வந்திதிகளுக்கு பதிலடி கொடுத்தார்" என செய்யாறு பாலு கூறியுள்ளார்.