28 வயதில் கோடிகளில் புரளும் மகா ராணி!! ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு..
ஜான்வி கபூர்
தமிழ் சினிமாவில் 80களில் புகழின் உச்சத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர்களில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழை தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நாயகியாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் உயிருடன் இருக்கும் போதே அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்க தொடங்கிவிட்டார்.
பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய ஜான்வி சமீபத்தில் தென்னிந்தியா படத்தில் நடிக்க தொடங்கினார். அதன்படி, ஜுனியர் என்டிஆருடன் தேவாரா படத்தில் நடித்திருந்தார். அடுத்து ராம் சரணுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும் பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர் இன்று மார்ச் 6 ஆம்தேதி அவரது 28-வது வயதினை எட்டியுள்ளார். தற்போது அவரது சம்பளம், சொத்து விவரங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
ஒரு படத்திற்கு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார் ஜான்வி. 2018ல் நடிக்க ஆரம்பித்து 7 வருடங்களில் 10 படங்களில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்து 28 வயதில் சுமார் ரூ. 82 கோடிக்கும் மேல் சொத்துக்களை சேர்த்துள்ளார்.
மேலும் பிராண்ட் அம்பாஸ்டராக 75 லட்சம் முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். மும்பையில் அவருக்கு சொந்தமாக 39 கோடி மதிப்பில் டிரிபிள் எக்ஸ் அப்பார்ட்மெண்ட் மற்றும் பந்தரா பகுதியில் 65 கோடி மதிப்பில் ஒரு வீடும் இருக்கிறதாம்.
