பல நடிகரை உதறி ராக்கி கட்டியவரையே திருமணம் செய்த நடிகை ஸ்ரீதேவி.. உண்மையை கூறிய பிரபலம்..

Sridevi Gossip Today Indian Actress
By Edward Apr 08, 2023 08:30 AM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக 80களில் கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்தி முதல் தென்னிந்திய சினிமா வரை இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தது நடிகர்களுக்கு இணையாக சம்பளமும் வாங்கிய நடிகையாக திகழ்ந்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துபாய் திருமண விழாவிற்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு தங்கியிருந்த ஓட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். தற்போது ஸ்ரீதேவி குறித்த சில ரகசியங்களை பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்துள்ளார்.

பல நடிகரை உதறி ராக்கி கட்டியவரையே திருமணம் செய்த நடிகை ஸ்ரீதேவி.. உண்மையை கூறிய பிரபலம்.. | Sridevi Secret Befor Boney Kapoor Marriage

நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பியதாகவும் அதை நாசுக்காக ஸ்ரீதேவி மறுத்துள்ளார். மேலும் நடிகர் கமல் ஹாசனை, நடிகை ஸ்ரீதேவி திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால் கமல் ஹாசன், ஸ்ரீதேவியை தங்கையாக நினைத்து வந்ததாகவும் கூறியிருந்தார்.

பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த புதிதில், நடிகர் மிதுன் சர்க்கரவர்த்தியுடன் காதலில் இருந்து வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தை இருக்கும் முன்னணி நடிகருடன் தொடர்பில் இருந்து வந்தார் ஸ்ரீதேவி.

பல நடிகரை உதறி ராக்கி கட்டியவரையே திருமணம் செய்த நடிகை ஸ்ரீதேவி.. உண்மையை கூறிய பிரபலம்.. | Sridevi Secret Befor Boney Kapoor Marriage

அதன்பின் சில பிரச்சனைகள் சந்தித்ததால், ஸ்ரீதேவியை கழட்டிவிட்டு மனைவியுடன் வாழ்ந்து வந்தார் மிதுன் சர்க்கரவர்த்தி. இதன்பின் தான் போனி கபூர் குடும்பத்துடன் நெருக்கம் ஏற்பட்டுருந்ததாம். இந்த சம்பவம் மிதுன் சர்க்கரவர்த்தியுடன் தொடர்பில் இருக்கும் போது நடந்துள்ளது.

இதை அறிந்த மிதுன் ஸ்ரீதேவி கையில் ராக்கி கயிறை கொடுத்து போனி கபூருக்கு கட்டக்கூறியிருக்கிறார். அதன்பின் போனி கபூர், ஸ்ரீதேவியின் சொத்துமீது ஆசைப்பட்டு முதல் மனைவியை விவாகரத்து செய்து ஸ்ரீதேவியை இரண்டாம்திருமணம் செய்து கொண்டார்.