கணவருடன் ஒரே அறையில் தங்க மறுத்த ஸ்ரீதேவி!! போனி கபூர் சொன்ன உண்மை ரகசியம்..
நடிகை ஸ்ரீதேவி
இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக 80, 90 காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமாவில் தனது சினிமா பயணத்தை தொடங்கி, பாலிவுட்டுக்கு சென்று டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு பிரபலமானார்.
தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் அனைவரையும் கவர்ந்த ஸ்ரீதேவி, கடந்த 2018ல் துபாய் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். ஸ்ரீதேவியின் மரணம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
போனி கபூர்
இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஸ்ரீக்கு இந்தி தெரியாது. இந்தி சினிமாவில் அவரது முதல் 5-6 படங்கள் டப்பிங் செய்யப்பட்டன. ஆனால் அவரது நடிப்பு பாதிக்கப்படுவதாக உணர்ந்ததால், அவர் இந்தி கற்றுக்கொண்டார்.
டப்பிங் தியேட்டரில் அவருக்கு ஒரு இந்தி ஆசிரியர் இருந்தார். அவர் இந்தி படங்களை டப்பிங் செய்யத்தொடங்கினார். ஸ்ரீதேவியின் அர்ப்பணிப்பு ஒருபோதும் குறையவில்லை.
மாம் படத்திற்காக அவ்ர் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு டப்பிங் செய்தார். மேலும் மலையாள பதிப்பையும் சிறிது டப்பிங் செய்தார். ஆனால் டப்பிங் நடிப்புடன் ஒத்திசைவாக இருப்பதை பார்க்க அவர் எப்போது மலையாள டப்பிங் கலைஞர்களுடன் அமர்ந்திருப்பார்.
சில கலைஞர்கள் மட்டுமே இத்தகைய அர்ப்பணிப்பை கொண்டுள்ளனர். மாம் படத்திற்கு முதலில் ஏ ஆர் ரஹ்மானை கமிட் செய்ய முடிவெடுத்தோம். ஆனால் அவர் சம்பளம் அதிகமாக வாங்கியதால் கமிட் செய்யமுடியவில்லை.
ஒரே அறை
ஸ்ரீதேவியின் சம்பளத்திற்காக ஒரு தொகையை நாங்கள் ஒதுக்கி வைத்திருந்தோம். ஸ்ரீதேவி அந்த மீதமுள்ள ரூ. 50-70 லட்சம் பணத்தை வாங்காமல் அதை ரஹ்மானுக்காக எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் கூறினார். மாம் படம் தான் நாங்கள் இறுதியாக படமாக்கிய படமாக இருந்தது. அப்படத்தின் சூட்டிங் உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் எடுத்தோம். பின் ஜார்ஜியாவில் படம்மாக்கியபோது, என்னை அவருடைய அறையில் அனுமதிக்கவில்லை.
ஏனென்றால் கதாபாத்திரத்தின் கவனத்தை டிஸ்டர்ப் பண்ணும் என்பதால் என்னை ஸ்ரீதேவி, அவரின் அறையில் அனுமதிக்கவில்லை. அந்த ரோலில் அவர் கவனமாக இருந்ததால், ஒரு உண்மையான மனைவியாக இருப்பதன் மூலம் அதை நானும் விரும்பவில்லை. படத்தில் அம்மாவின் கதாபாத்திரமாகவே இருக்க விரும்பினாள் என்று ஸ்ரீதேவியை பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்துள்ளார்.