புர்கா அணிந்து திரையரங்கில் கமல்ஹாசன் படம் பார்த்த ஸ்ரீதேவி.. என்ன படம்?

Kamal Haasan Sridevi Tamil Cinema
By Yathrika May 04, 2025 06:30 AM GMT
Report

ஸ்ரீதேவி-கமல்

ரசிகர்கள் தமிழ் சினிமாவில் கொண்டாடிய நிறைய ஹிட் ஜோடிகள் உள்ளார்கள், அதில் ஒரு ஜோடி தான் ஸ்ரீதேவி-கமல்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய அனைத்து படமும் செம ஹிட், மற்ற மொழிகளிலும் இவர்களின் ஜோடி படங்கள் கொண்டாடப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவி மிகவும் பிரபலமாக இருந்த காலத்தில் கமல்ஹாசன் நடித்த ஒரு படத்தை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் காண மிகவும் ஆசைப்பட்டுள்ளாராம். ஆனால் தன்னை பார்த்தால் கூட்டம் வந்துவிடும் என்பதால் புர்கா அணிந்து படம் பார்த்துள்ளார்.

புர்கா அணிந்து திரையரங்கில் கமல்ஹாசன் படம் பார்த்த ஸ்ரீதேவி.. என்ன படம்? | Sridevi Wore Burkha Watch Kamal Movie In Theatre

கடந்த 2000ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் ஹே ராம். இந்த படத்தை தான் ஸ்ரீதேவி ரசிகர்களுடன் ரசிகராக புர்கா அணிந்து திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார்.

இந்த தகவலை நடிகர் கமல்ஹாசனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

புர்கா அணிந்து திரையரங்கில் கமல்ஹாசன் படம் பார்த்த ஸ்ரீதேவி.. என்ன படம்? | Sridevi Wore Burkha Watch Kamal Movie In Theatre