அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க என்ன கூப்பிடல!! நடிகை ஸ்ரீதிவ்யா கூறிய உண்மை..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதோடு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா.
5 வருடம் வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகி ஊத கலர் ரிப்பன் நடிகையாக பிரபலமானார் ஸ்ரீதிவ்யா. இப்படத்தினை தொடர்ந்து ஜீவா, வேள்ளைக்கார துறை, ஏட்டி, பென்சில், காஷ்மோரா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இதன்பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விட்டார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ரீமேக் படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாகவும் ஏற்கனவே பண்ண கதையை வேறு மொழிக்கு ரீமேக் செய்யும் போது உண்மைத்தன்மை பாதிப்பு ஏதும் குறையக்கூடாது.
ஆனால் இயக்குனர்கள் படத்தின் கமர்சியல் எலமெண்ட்டுக்காக சேர்க்கிறேன் என்ற பெயரில் தேவையில்லாத சண்டை காட்சி, நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள், ஐட்டம் பாடல் என்றெல்லாம் பண்ணனும் என்று விடாப்பிடியாக இருப்பார்கள். ஆனால் நான் நடிக்கும் படத்தில் இப்படியான பிரச்சனை எனக்கு வந்ததில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா.