எனக்கும் அவருக்கும் திருமணமா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன் பட நடிகை
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் Manasara, பஸ்ட் ஸ்டாப் போன்ற படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகினார். அப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிசட்டை, பெங்களூர் நாட்கள், ஈட்டி, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவை தொர போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
அப்படத்தினை தொடர்ந்து சினிமா பிரபலம் ஒருவரின் வீட்டு விஷேசத்தில் கொடுத்த இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அளவுக்கு மீறிய போதையில் இருந்ததாகவும் அந்த விசயம் வெளியில் தெரியவரை அவரது படவாய்ப்புகள் குறைந்ததாகவும் கூறப்பட்டது.
Raid ரீஎண்ட்ரி
இந்நிலையில் 6 ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சிக்கும் தலையை காட்டாமல் சொந்த ஊரில் செட்டிலாகிய ஸ்ரீதிவ்யா, நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக Raid என்ற படத்தில் நடித்துள்ளார். 6 வருடங்களுக்கு பின் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஸ்ரீதிவ்யா, கொஞ்சம் பயமா இருக்கு, ரொம்ப நாள் கழித்து மேடையில் பேசுறது. எனக்கு Raid படம் முத்தையா சாருக்காக தான் பண்ணினேன். அதன்பின் தான் படத்தை இயக்கியது கார்த்தின்னு தெரிஞ்சது என்று கூறியிருந்தார்.
அதன்பின் பத்திரிக்கை ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. சில படங்களின் கதை எனக்கு சரியில்லை என்று நானே நிராகரித்திருக்கிறேன், நல்ல படங்களும் அமையவில்லை. ஆனால் நான் மற்ற மொழிகளில் நடித்து வருவதால் தமிழில் ஏற்பட்ட இடைவெளியை நான் உணரவில்லை.
திருமண வதந்திகள்
சமீபகாலமாக என்னுடைய திருமணம் குறித்த வதந்திகள் பரவி வருகிறது. நான் யாரையோ காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்யப்போவதாகவும், அதை நானே கூறியதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அதில் சிறிதளவும் உண்மை இல்லை என்று ஸ்ரீதிவ்யா கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
You May Like This Video
