5 வாட்டி நோ-ன்னு சொல்லியும் வற்புறுத்திய இயக்குனர்!! விஷால் அண்ணியார் ஸ்ரியா ரெட்டி கூறிய சம்பவம்..
நடிகர் விஷால் நடிப்பில் 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது திமிரு. இப்படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரியா ரெட்டி. இப்படத்தினை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம், சில சமயங்களில் சுழல், சலார் போன்ற படங்களில் நடித்தும் வந்தார்.
நடிகர் விஷாலின் அண்ணனை திருமணம் செய்து செட்டிலாகி ஸ்ரியா ரெட்டி, திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரியா, சமீபத்தில் சலார் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் புஷ்கர் - காயத்ரி எழுத்தி, பிரம்மா ஜி அருசரண் முருகையா இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் ஸ்ரியா ரெட்டி காவலர் ரெஜினா தாமஸ் ரோலில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சுழல் படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்திருக்கிறார்.
கதையில் எனக்கு என்ன ரோல் என்று பார்ப்பதாகவும் எனக்கு பிடித்த சுவாரஷ்யமான இயக்குனர்களுடன் பணியாற்றி விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அப்படி தான் சுழல் படத்திற்காக 5 முறை வேண்டவே வேண்டாம் என்று கூறினேன்.
ஆனால் புஷ்கர் - காயத்ரி எனக்கு கதை குறித்த விளக்கம் பற்றி பெரியளவில் மெயில் செய்து அனுப்பினார். அந்த மெயிலின் கடைசியில் எப்படி நீங்கள் நோ சொன்னீர்கள் என்று கூறியிருந்தார். அதன்பின் தான் ரெஜினா கதாபாத்திரத்தில் நடித்ததாக ஸ்ரியா ரெட்டி தெரிவித்திருக்கிறார்.