விஷால் அண்ணியாரா இது! க்ளாமரில் மிரட்டும் நடிகை ஸ்ரேயா ரெட்டி புகைப்படங்கள்..
நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரியா ரெட்டி. இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார். ஏலேய் இசுக்கு என்று டயலாக் பெரியளவில் பேசப்பட்டது. இதையடுத்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குழந்தையை பெற்று பார்த்து கொண்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க அண்டாவ காணோம் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
கதிர், ஐஸ்வர்யா ராஜே நடிப்பில் உருவாகியுள்ள சுழல் என்ற படத்திலும் நடித்துள்ளார். திருமணமாகியபின்னும் க்ளாமரில் வாய்ப்பிளக்கும் படியான ஆடையை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது தன் பார்வையால் இளசுகளை ஈர்க்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.