விஜய், அஜித்-ஐ விட நாங்க ஒன்னும் கொறஞ்சவங்க கிடையாது!! சர்ச்சையாக பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் விழாவிற்கு கிளாமர் ஆடையில் சென்று அனைவரையும் ஈர்த்து வந்தார்.
அங்கு அளித்த பேட்டியொன்றில் ஹீரோயின்கள் கம்மியாகவும் ஹீரோக்கள் பல கோடிகளில் சம்பளம் வாங்குவது பற்றியும் நடிகை ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.
அதில், அஜித், விஜய் போன்ற நடிகர்களை விட நாங்க எந்த விதத்திலும் குறைந்து போய்விடவில்லை என்றும் எங்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு நிகரான சேலரியை பெறுகிறார் என்பது எனக்கு பெருமையான ஒன்றும் என்றும் நடிகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கு சம்பளம் கொடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன் அஜித், விஜய் அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள் என்று கூறியது வரவேற்பை பெற்றாலும் சிலர் எதிர்ப்பையும் திணித்து வருகிறார்கள்.