ரஜினி இல்ல, இப்ப ஜோதிகாவையும் மாத்திட்டாங்க! ஆண்ட்ரியாவை தூக்கிவிட்டு அந்த நடிகையை புக் செய்த இயக்குனர்..

Andrea Jeremiah Raashi Khanna Trisha
By Edward Jun 28, 2022 07:34 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி 2005ல் வெளியான படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த சந்திரமுகி படம் 700 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 வில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். சந்திரமுகி படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்த நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இசையமைப்பாளர் எமெ எம் கீரவேணி இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் படத்தில் ஜோதிகாவின் ரோலுக்கு யார் தேர்வாகியிருப்பார் என்று ஆண்ட்ரியா, ராஷி கண்ணா போன்ற நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் ஆண்ட்ரியா அதற்கு செட்டாகமாட்டார் என்று 90ஸ் கனவுக்கன்னி நடிகை திரிஷாவை புக் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் இப்படத்தினை முடித்து கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளார்கள்.