விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா.. லீக் ஆன வீடியோ

Viral Video Vijay Deverakonda Rashmika Mandanna
By Bhavya Mar 31, 2025 09:30 AM GMT
Report

ராஷ்மிகா - விஜய் தேவர்கொண்டா  

கீதா கோவிந்தம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தின் முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

சமீப காலமாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால், இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சூசகமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா.. லீக் ஆன வீடியோ | Stars Dating Video Goes Viral

 டேட்டிங்

இந்நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு டேட்டிங் சென்றுள்ளனர். இதில், முதலில் ராஷ்மிகா ஹோட்டல் உள்ளே செல்கிறார்.

அவர் உள்ளே சென்று சில நிமிடங்களிலேயே ஹோட்டல் பின்புறம் மூலம் நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு ஹோட்டல் உள்ளே சென்றுள்ளார். தற்போது, இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.