முத்தக் காட்சிக்கு நோ.. கொள்கையை விட்டு கொடுக்காத டாப் நட்சத்திரங்கள்
பொதுவாக சினிமாவில் நடிப்பதற்காக நட்சத்திரங்கள் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வர். நடிகைகள் முத்த காட்சிகளில் நடிப்பது, நடிகர்களுடன் நெருங்கி நடிப்பது போன்ற விஷயங்கள் தான் அவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை தேடி தரும்.
அவ்வாறு அந்த வாய்ப்பை விட்டுவிட்டால் சினிமாவில் நிலைத்து நிற்காத பல நடிகைகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால், பாலிவுட் சினிமாவில் இது போன்று எந்த விதமான ஒரு கருத்தும் இல்லை.
அவ்வாறு பாலிவுட் சினிமாவில் முத்த காட்சிகளில் நடிக்க மறுத்த டாப் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து கீழே காணலாம்.
சோனாக்ஷி சின்கா:
தன்னிடம் கதை கூறும் இயக்குநர்களிடம் முதலில் சோனாக்ஷி முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற ஒரு விஷயத்தை மிகவும் கண்டிப்பாக கூறி வருகிறாராம்.
சல்மான் கான்:
பாலிவுட்டின் டாப் ஹீரோவான சல்மான் கானை காதல் மன்னன் என்று பலர் கூறுவர். ஆனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக பின்பற்றி வருகிறாராம்.
கங்கனா ரணாவத்:
மிக இளம் வயதிலேயே நடிக்க வந்தவர்களில் இவரும் ஒருவர். முத்த காட்சிகளில் நடிக்க மறுத்த இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறாராம்.
ஷில்பா ஷெட்டி:
பாலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வரும் ஷில்பா ஷெட்டி நெருக்கமான காட்சிகளில் நடிக்க நோ சொல்லி வருகிறாராம்.
மிருனால் தாகூர்:
தன் பெற்றோர்களுக்கு முத்த காட்சிகளில் நடிப்பது பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் நெருக்கமான காட்சிகளுக்கு நோ சொல்லி வருகிறாராம்.